என்றும் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!
இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்கங்களின் மாறுதலால் பல்வேறு விதமான சரும பிரச்சனைகள் உண்டாகிறது.
குறிப்பாக எண்ணெய் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் முகத்தில் எண்ணெய் வழிந்து ஒரு விதமான அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் விரைவில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர்கள் போல் தோற்றமளிக்க இந்த உணவு பழக்கங்கள் காரணமாக அமைகிறது. இந்நிலையில் இயற்கையான முறையில் செய்யப்பட்ட குங்குமாதி தைலம் ஒன்றை பயன்படுத்தி என்றும் நம்மை இளமையாக வைத்திருக்க முடியும்.

குங்குமாதி தைலம் என்பது ஒரு ஆயுர்வேத எண்ணெய் வகையாகும். இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருவதோடு மாய்சுரைசராகவும் பயன்படுகிறது. தூங்க செல்வதற்கு முன்பாக இந்த குங்குமாதி தைலத்தை சிறிதளவு கையில் எடுத்து ஐந்து நிமிடங்கள் வரை முகத்தில் மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தின் நிறம் அதிகரிப்பதோடு பிரகாசமாகவும் தோற்றமளிக்கும்.
மேலும் இந்த வழக்கமான மசாஜ் தூள் செல்களை மீண்டும் உருவாக்க பயன்படுகிறது. முகத்தில் உள்ள மெல்லிய கோடுகள் சுருக்கங்கள் ஆகியவற்றை குறைத்து உங்களை வயதான தோற்றத்திலிருந்து விடுபட செய்கிறது.
இருப்பினும் இந்த தைலத்தை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


