- Advertisement -
இரவு முழுவதும் நன்றாகத் தூங்கியும், காலையில் எழுந்தால் தலைவலியுடன் விழிப்பதா?
அப்படியானால், உங்கள் பழக்கவழக்கங்கள் அல்லது உடல்நிலையில் சில மாற்றங்கள் தேவைப்படலாம். காலையில் ஏற்படும் தலைவலிக்கு நீங்கள் சாதாரணமாக நினைக்கும் இந்த முக்கிய காரணங்கள் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தூக்கம் தொடர்பான காரணங்கள்:
- சரியான தூக்கமின்மை (இன்சோம்னியா):
- நீங்கள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால், காலையில் தலைவலிக்கும்.
- நீண்ட நாட்களாக தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் கண்டிப்பாக இன்சோம்னியாவால் பாதிக்கப்படுவர், இவர்களுக்கு சில சமயங்களில் காலையில் தலைவலி அதிகமாகவே இருக்கும்.
- தீர்வு: இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.
- அதிக நேரம் தூங்குதல்:
- நீங்கள் நீண்ட நேரம் தூங்கினால் காலையில் கண்டிப்பாக தலைவலிக்கும்.
- ஏனெனில் அதிக நேரம் தூங்கினால் உங்களது இயற்கையான தூக்க சுழற்சி பாதிக்கப்படும், இதன் காரணமாக தலைவலி ஏற்படும்.
- தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea):
- தூக்கத்தில் மூச்சுத் திணறல் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், இரவு உங்களது தூக்கம் பாதிக்கப்படும்.
- சரியான தூக்கம் இல்லையென்றால் காலை எழுந்ததும் தலைவலி ஏற்படும்.
- சரியான நிலையில் தூங்காதது:
- நீங்கள் சரியான நிலையில் தூங்காத போது கழுத்து தசைகளில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகி தலைவலியை தூண்டும்.
உடல் மற்றும் மனநலக் காரணங்கள்:
- மன அழுத்தம் மற்றும் கவலை:
- மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான கவலை தலைவலியை ஏற்படுத்தும்.
- அது மட்டுமல்லாமல், மன அழுத்தம் தூக்கத்தையும் பாதிக்கும்.
- அறிவுரை: உங்களுக்கு மன அழுத்தப் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் சென்று சரியான ஆலோசனை பெறுங்கள்.
- பற்களை கடிக்கும் பழக்கம் (Bruxism):
- உங்களுக்கு பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால், காலையில் எழுந்ததும் தலைவலி உண்டாகும்.
- பற்களை அடிக்கடி கடித்தால் தாடை மூட்டுகளில் வலி ஏற்பட்டு, இதன் காரணமாக தலைவலிக்க ஆரம்பிக்கும்.
- உடலில் நீர்ச்சத்து குறைவு (Dehydration):
- உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லையென்றால் கூட தலைவலி ஏற்படும்.
- நீங்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் இரவு தூங்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். இதன் காரணமாக காலையில் எழுந்ததும் தலைவலி உண்டாகும்.
குறிப்பு: தொடர்ச்சியாக காலையில் தலைவலி இருந்தால், சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
சொடக்கு எடுத்தல் ஆபத்தா? அதன் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் பாதிப்புகள்!


