Homeசெய்திகள்அரசியல்தில்லாக தயாராகும் திமுக…திசை தெரியாமல் தவிக்கும் அதிமுக… அய்யோ பாவம் தேமுதிக…

தில்லாக தயாராகும் திமுக…திசை தெரியாமல் தவிக்கும் அதிமுக… அய்யோ பாவம் தேமுதிக…

-

நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான வியூகம் வகுப்பது, கனவுகாணுவது, கற்பனை கோட்டை கட்டுவது என்று சில கட்சியினர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

தில்லா களம் காணும் திமுக

திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தேர்தல் என்றால் மற்ற கட்சியினர் ஆச்சரயப்படும் அளவிற்கு தேர்தல் வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்து வார்கள். தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் சொல்லவே வேண்டாம்.

திமுக இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் துணை அமைப்புகளின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தொண்டர்களுக்கு நம்பிக்கை யூட்டியுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் முதலமைச்சர் நேரில் அழைத்து வாழ்த்தி, உற்சாகப்படுத்தி உள்ளார்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை நடத்தி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை மனுக்கள் கொண்டு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். கோபமாக நடந்துக் கொள்ளக் கூடாது என்று நிறைய ஆலோசனைகளையும், சில உத்தரவுகளையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக 39 இடங்களில் வெற்றிப்பெற்று சாதனை படைத்தது. அதே வெற்றியை வருகின்ற 2024 தேர்தலிலும் பெற வேண்டும். அதற்கு கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டம் முடிந்ததும் திமுக மாவட்ட செயலாளர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.

திமுக தலைமையில் கூட்டணி

திமுக தலைமையில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் மனிதநேயம் மக்கள் கட்சி என்று ஏற்கனவே உள்ள கட்சிகள் கூட்டணியில் தொடர்கிறது. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு 17 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் மாநில அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர் என்ற அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் மீண்டும் கைப்பற்றுவதில் சந்தேகம் இல்லை.

அதிமுக பரிதாபம்

திருவிழாவில் காணாதபோன குழந்தையைப் போல் தமிழ்நாடு அரசியல் களத்தில் இருந்து தொலைந்து போய் இருக்கிறது. இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இருக்கின்ற போட்டி மனப்பான்மையை வைத்துக் கொண்டு பாஜக அழகாக தன்னை முன்னிலை படுத்திக் கொண்டு வளர்ந்து வருகிறது.

அதிமுகவின் தொண்டர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் அணி வகுக்கிறார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால் அந்த பிரச்சனையை முடித்து வைக்க பாஜக விரும்பவில்லை. இன்னும் சிறிது காலத்திற்கு அந்த கட்சி தலைவர்களை அலைய வைத்து, அசிங்கப்படத்தி அதன் பின்னர் கூட்டணி பேரம் பேசி முடிக்கப்படும் என்று பஜக நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். அதுவரை தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனைகள், திமுகவிற்கு எதிராக அரசியல் களமாடுவது என்று அனைத்தையும் அதிமுகவிற்கு பதிலாக பாஜகவே கையாளும். 2024 ஜனவரிக்கு மேல் கூட்டணி பேரத்தில் பாஜக- அதிமுக 20/20 என்று தொகுதி பாகப்பிரிவினை நடைபெறும். அதுவும் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்ற சந்தேகம் பரவலாக இருந்துவருகிறது.

அதிமுகவின் வீழ்ட்சி அந்த கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா? என்பதைவிட தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.

MUST READ