spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்" – சேகர்பாபு பெருமிதம்

“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்” – சேகர்பாபு பெருமிதம்

-

- Advertisement -

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்" – சேகர்பாபு பெருமிதம்எழும்பூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில் சார்பில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மண்டபம் அமைக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் இறுதியாக கொளத்தூரில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுமானப் பணி மற்றும் பூம்புகார் நகரில் உள்ள கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்பொழுது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஶ்ரீதர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,

we-r-hiring

“இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் திட்ட பணிகளை ஆய்வு செய்ததாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் தமிழ் கடவுள் முருகனுக்கு திமுக ஆட்சியில் தொண்டு செய்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் செய்யப்பட்டதில்லை என்றும் முருகன் கோயில்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றுத் தரக்கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என கூறிய அவர் வரும் 14 ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது என்றார்.“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்" – சேகர்பாபு பெருமிதம்மேலும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்குகாக மூன்று இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும். பேருந்து நிலையங்களில் எல்.இ.டி அகண்ட திரைகள் திரை மூலம் கோவில் குடமுழுக்கு நேரலையில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் லட்சக்கணக்கான உணவுப் பொட்டலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

நாளை மதியம் 12 மணியோடு திருச்செந்தூர் கோவில் நடை சாத்தப்படும் அதன் பிறகு குடமுழுக்கு நடந்த பிறகு பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவில் குடமுழக்கில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் 25 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். 25 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் திருச்செந்தூர் கடற்கரையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, கடற்கரைகளில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க ஓ.ஆர்எஸ் பானங்கள் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்த அவர் இன்று முதல் கூடுதலாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்குக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் கூட முழுக்க ஒரு மையில் கள் என்றும் பேசினார்.

முதலில் தன்னையும் தான் சார்ந்து இருக்கக்கூடிய இயக்கத்தை விஜயை பார்க்க சொல்லுங்கள் என தெரிவித்த அமைச்சர் மடப்புரம் இளைஞர் மரணம் தொடர்பாக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்தார். விஜய் போன்றோர் அறையில் இருந்து அறைகூவல் விடுவதை எங்கள் முதல்வர் லெஃப்ட் ஆண்டில் டில் செய்வார் என்றார்.

“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்" – சேகர்பாபு பெருமிதம்

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி எழும்பூர் வடக்கு பகுதிக்கு உட்பட்ட  புளியந்தோப்பு, சூளை அங்காளம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு காலை உணவு வழங்கினார்.

வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்

MUST READ