கோவையில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

2026 – சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் துவங்கினார்.
கோவை மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சார பயணத்தை துவங்கிய பழனிச்சாமி, 5 இடங்களில் வாகனத்தில் இருந்தவாறு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். தொடர்ந்து ரோடு ஷோ, விவசாயிகளுடனான கலந்துறையாடல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் பிரச்சார பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகள்.
அஜித்குமார் வழக்கறிஞர் திடீர் வேண்டுகோள்! நிகிதாவுக்கு எதிராக மாணவிகள்!