தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் தனது பரப்புரையை மேற்கொள்வதற்காக திருச்சி வந்தடைந்தார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் இன்று நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் கார் மூலம் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்ட விஜய் வழி நெடுகிலும் பொதுமக்கள் தொண்டர்கள் என உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான வளையபட்டி பகுதிக்கு வருகை தரும் விஜய் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்காக பொதுமக்கள் தொண்டர்கள் என காலை 7 ஏழு மணி அளவிலிருந்தே மக்கள் வர தொடங்கினா். அப்போது இளைஞர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் பல்வேறு முழக்கமிட்டும் விஜய்க்கு வரவேற்பு அளிப்பதற்காக ஆரவாரம் செய்து பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சில இளைஞர்கள் உடலில் தவெகவின் கட்சி கொடியின் கலர்களை உடலில் பூசிக்கொண்டு உழவந்தனர். தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொண்டர்கள் பொதுமக்கள் என விஜய்க்கு பரிசளிப்பதற்காக நதிகள் வாழ்க்கை அடங்கிய புத்தகங்களை இஸ்லாமிய பெண்கள் வழங்கவும், அதோடு பெண்களுக்கு சக்தியாக விளங்கும் சூலாயுதத்தை விஜய்க்கு பரிசாக வழங்க காத்திருந்தனர். நான்கு மணி நேரம் கடந்த பிறகு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வளையபட்டி பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் தொண்டர்கள் என விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்த விஜய் பொது மக்களை பார்த்து கை அசைத்தபடி சந்தித்து வந்தார். தொடர்ந்து பொதுமக்கள் பரிசளித்ததையும் பெற்றுக் கொண்டார். மேலும் இளைஞர்கள் தமிழ்நாட்டு வரைபடத்திற்குள் விஜய் இருப்பது போன்ற படம் வரைந்து அவருக்கு பரிசாக வழங்கினா். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டு அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் போது ஆம்புலன்ஸ் வாகனம் கூட்டத்துக்குள் சிக்கியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் வழிவகை செய்து ஆம்புலன்ஸை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகையால் 4 மணி நேரத்திற்கு மேலாக சேலம் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாஜகவில் உட் கட்சி பூசலா? அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றமா?


