நெல்லையில் நயினார் நாகேந்திரன் தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றத்தை துவங்கிய பாஜக தொண்டர்கள் விரைவில் திறப்பு விழா செய்ய இருக்கிறாா்கள்.பாஜகவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கினார். அதனைத் தொடர்ந்து புதிய மாநில தலைவராக நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி இணைந்தது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எந்த பதவியும் கொடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாஜகவில் அண்ணாமலைக்கென தனி ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனியாக தொண்டர்கள் திரள தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொந்த ஊரான நெல்லையில் இன்று பாஜக தொண்டர்கள் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட அண்ணாமலை நற்பணி மன்றம் என ஒரு மன்றத்தை துவக்கி உள்ளனர்.
ஏற்கெனவே பாஜகவில் பொறுப்பு வழங்கப்படாததால் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற ஒரு பேச்சு வார்த்தையும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாஜக தொண்டர்களே அண்ணாமலைக்கு மன்றத்தை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மாநிலத் தலைவர் இருக்கும் சொந்த ஊரிலே அண்ணாமலைக்கு ஆதரவாக நிர்வாகிகள் திரண்டு இருப்பது மாநிலத் தலைவரை மாற்றுவதற்கான நெருக்கடியை கொடுக்கிறதா எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். முதல் கட்டமாக நெல்லை கே டி சி நகர் பகுதியில் இன்று அண்ணாமலைக்கு ஆதரவாக மன்றத்தை அறிமுகப்படுத்தும் கட்டவுட் வைத்திருக்கிறோம்.

தொடர்ச்சியாக மாவட்ட முழுவதும் வைக்க இருக்கிறோம். விரைவில் பாஜகவில் முக்கிய தலைவரை அழைத்து மன்றத்தை திறக்க இருக்கிறோம். கட்சிக்குள் கோஷ்டி பூசலெல்லாம் இல்லை. அண்ணாமலையின் மீதுள்ள மரியாதை அன்பின் காரணமாக மன்றத்தை துவக்கி இருக்கிறோம். அவருக்கும் தகவல் கூறிவிட்டோம். சமூக சேவைகளை செய்வதற்காக மன்றம் துவங்கப்பட்டுள்ளது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி…