இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. இதனால் தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்க் கொண்டு வருகிறது. இதன் காரணமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், குறைந்தபட்ச சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், தமிழக சுகாதாரத் துறை எச்சரித்து வந்தது. மேலும், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காய்ச்சலால் சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்தாா். காய்ச்சல் சாியாக நிலையில், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
