- Advertisement -
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கழகத் தலைவா் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் – திருவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் – BLA 2 நிர்வாகிகளைச் சந்தித்து இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்“.
2026 சட்டமன்ற தேர்தலில் கழக அணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம். மண், மொழி, மானம் காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
