துரோகம் செய்த பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் இருக்கமாட்டோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் சந்தித்தது நட்பு ரீதியாகத் தான் என்றும் ஆனால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சென்னை அடையாறில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தினகரன்,

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்ற அறிவிப்புக்கு பிறகு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இரண்டு நாள் முன் சந்திப்பு நடந்ததைத் தொடர்ந்து, நிர்வாகிகள் உடனான ஆலோசனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறதென கூறினார். அண்ணாமலை உடனான சந்திப்பு முன்பே திட்டமிட்டது தான் என்றும் ஆனால் நட்பு ரீதியான சந்திப்பாக தான் இருந்தது என்றும் அவர் விளக்கினார். மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது தான் பா.ஜ.க.கூட்டணியில் அமமுக இணைந்தது என்றும் கூட்டணியில் இருந்து விலகிய போதும் கூட அவருடன் நட்பு தொடர்ந்ததாகவும் டி.டி.வி. கூறினார்.
கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய அவசியம் இல்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருக்க கூடாது என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்ததால் தான் தங்களை சந்திக்கவும் கூட்டணி வைக்கவும் தயங்குவதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல் இதில் பரிசீலிக்க டெல்லிக்கு அழைத்தார்கள் என்றும் ஆனால் தாம் தயாராக இல்லை என்பதை தெரிவித்துவிட்டதாகவும் டி.டி.வி. கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு வரவேற்றதாக கூறிய டிடிவி, அதிமுக தலைமையை ஏற்றாலும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கமாட்டோம் என்பதை தொடர்ச்சியாக பேசி வருவதை சுட்டிக்காட்டினார். அதிமுக கட்சியின் விதியையே மாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி என்று குறை கூறிய தினகரன், தென் மாவட்ட வாக்கு வங்கிகள் பழனிச்சாமிக்கு கிடைக்காது என்ற சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வரும் தேர்தலில் அமமுக இருக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதேபோல் நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட எந்த நெருடலும் இல்லை என டிடிவி தினகரன் குறிப்பிட்டார். த.வெ.க உடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது ஊடகத்தின் மூலமாகவே தெரியும் என்றும் ஆனால் கூட்டணி தொடர்பாக நல்லதே நடக்கும் என்றும் தினகரன் கூறினார். விஜயகாந்த் ஆரம்பத்தில் வந்த கூட்டத்தை விட, தற்போது விஜய்க்கு வரும் கூட்டம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் டி.டி.வி. தினகரன் பேட்டியின் போது தெரிவித்தார்.
அது மட்டும் நடக்கலனா ’96 பார்ட் 2′ படம் பண்ணவே மாட்டேன்…. இயக்குனர் பிரேம்குமார் பேட்டி!