spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன்...

பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டு

-

- Advertisement -

திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவகிறாா். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளாா்.பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டுசென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அப்போது, பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு சமூக நீதி விடுதிகள் என பெயர் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அனைத்து விடுதிகளையும் ஒரே பெயரில் அழைக்கும் வகையில் அரசாணை பிறப்பித்ததற்காக முதலமைச்சரை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார்.பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டுஇதை திமுக அரசின் பாராட்டத்தக்க சாதனையில் ஒன்றாக பார்ப்பதாகவும் திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக திருமா குறிப்பிட்டார். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன்,  பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னது உண்மையென்றால், தற்போது அதிமுகவின் கட்சியில் உள்ளவர்கள் உறுப்பினர்களா? அல்லது அமித்ஷாவின் தொண்டர்களா ?என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டை பொருத்தவரை எப்போதும்  இரு முனை போட்டி தான் என்றும்  எப்போதும் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தாலும் விபத்துகள் நடந்து நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன-ஆளூர் ஷா நவாஸ்

MUST READ