spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு

2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு

-

- Advertisement -

1995 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட கட்சி விதிகளின்படி தொடர்ந்து பாமக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரப்படி 2026 ஜூன் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணி தொடர்வாா். பாமகவில் உச்ச அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு என்றும், அந்தக் குழுவை கூட்டும் அதிகாரம் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கே உண்டு என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளாா்.

2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு

we-r-hiring

ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டதால் பாமக 2 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்த உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகிகளை மருத்துவர் ராமதாஸ் நீக்குவதும், அன்புமணி மீண்டும் அவர்களை கட்சிப் பொறுப்பில் இணைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் பக்கம் சாய்ந்தால் அருளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கினார்.

முன்னதாக, ராமதாஸ் அருளுக்கு இணை செயலாளர் பொறுப்பையும் வழங்கியிருந்தார். ஆனால் தற்போது, அன்புமணி அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளாா். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால் அருள் நீக்கப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு

ஆனால், தன்னை நீக்க ராமதாஸூக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக அருள் கூறிவந்தாா். இந்நிலையில், பாமகவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம்,மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமார் மற்றும்  பாமக வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரையும், பேரவை தலைவரையும் நேரில் சந்தித்து, அருளை சட்டமன்ற கட்சி கொறடா பதவியிலிருந்து நீக்கக் கோரிய மனுவை சமர்ப்பித்தனர்.

மேலும், இந்த மனுவில் கொறடா பதவிக்கு அருளுக்குப் பதிலாக எம்.எல்.ஏ சிவக்குமாரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில், 1995 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட கட்சி விதிகளின்படி பாமக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாமகவில் உச்ச அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு என்றும், அந்தக் குழுவை கூட்டும் அதிகாரம் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கே உண்டு. மேலும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரதின்படி 2026 ஜூன் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணி இருப்பாா். பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸின் மேல் எங்களக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும் கட்சியை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளாா்.

கோவை அதிமுக கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு?-நழுவிச் சென்ற அண்ணாமலை…

MUST READ