Homeசெய்திகள்அரசியல்ஒட்டகத்தில் ஓட்டு கேட்டு செல்வது கோமாளித்தனம் - ஜெயக்குமார்

ஒட்டகத்தில் ஓட்டு கேட்டு செல்வது கோமாளித்தனம் – ஜெயக்குமார்

-

- Advertisement -

இடைத்தேர்தலில் வாக்கு கேட்க திமுகவினர் ஒட்டகத்தில் செல்வது கோமாளித்தனம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jayakumar

we-r-hiring

ஈரோடு கிழக்கில் அத்துமீறல் நடைபெருவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினரின் பிரச்சாரத்தை திமுகவினர் தடுத்துவருகின்றனர். திமுகவினர் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கில் தினந்தோறும் அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. வாக்காளர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து ஆளுங்கட்சிக்கு சவுக்கடி கொடுப்பார்கள். மவுன புரட்சி நிச்சயமாக ஈரோடு கிழக்கில் ஏற்படும். அதிமுகவிற்கு வாக்களித்து மக்கள் திமுகவிற்கு தகுந்த பதிலடி அளிப்பார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒரே நாளில் 9 கொலை நடைபெறுகிறது. திருமங்கலம் பார்முலாவைவிட, ஈரோடு கிழக்கில் புது பார்முலா. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை ரூ 35.64 கோடி செலவு செய்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக செயல்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுகவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்தை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை. அவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? இடைத்தேர்தலில் வாக்கு கேட்க திமுகவினர் ஒட்டகத்தில் செல்வது கோமாளித்தனம். வாக்காளர்களுக்கு பணம், இறைச்சி உள்ளிட்ட பொருட்களை திமுகவினர் வழங்குகின்றனர். வாக்காளர்களை அடைத்துவைத்து ஜனநாயகத்தை ஏலி கூத்து ஆக்குகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் பிரச்சாரத்துக்கு மக்களை வரவிடாமல் திமுகவினர் தடுக்கின்றனர். காலை ரூ.500, மாலை ரூ.500, அசைவ உணவுகள், மளிகை பொருட்கள், காய்கறிகள் என வாக்காளர்களை கவர திமுகவினர் கொடுத்துவருகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.

MUST READ