ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஆதரவு கோரினர்.


சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டுகேட்டு அதிமுக இரு அணிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி,தங்கமணி, கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு கோரினர். இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் சி.பி ராதாகிருஷ்ணன் எச்.ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்பதற்காக தான் இங்கு வந்தோம்.அதிமுகவிற்கு ஆதரவு கோரி பேசினோம்.பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜக தலைவர் கூறுவார்.அவர்களது அலுவலகத்தில் அவர்களே தகவல்களை வெளியிடுவார்கள். இந்த சந்திப்பானது திருப்திகரமாக அமைந்தது” எனக் கூறினார்.
