Homeசெய்திகள்அரசியல்மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்- ஓபிஎஸ்

மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்- ஓபிஎஸ்

-

- Advertisement -

அதிமுக பொது குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும், மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

o panneerselvam

we-r-hiring

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம், தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ, அங்கு சென்று பெறுவோம். ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் ஆணவத்தை அதிமுக தொண்டர்கள் அடக்குவார்கள். ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் ஆணவத்தை அதிமுக தொண்டர்கள் அடக்குவார்கள். மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம். மக்கள் மன்றத்தில் நாங்கள் நீதி கேட்போம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்படவில்லை.

கூவத்தூரில் என்ன நடந்ததோ, அதுபோல இப்போது நடக்கிறது. இந்த கட்சி பன்னீர் செல்வம் தாத்தாவோ, பழனிசாமி தாத்தாவோ தொடங்கியது இல்லை. என்னையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என ஓபிஎஸ் கூறுகிறார். இது அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? ஆணவத்தின் உச்சத்தில் இருக்கும் ஈபிஎஸ் தான் திமுகவின் A- Z டீம். தொண்டர்களுக்காக எம்ஜிஆர் தொடங்கிய கட்சி அதிமுக. கட்சி உடையக்கூடாது என்று பொறுமை காத்தோம். என்னுடைய பயணமே தர்மயுத்தம், சுற்றுப்பயணம் உறுதியாக விரைவில் தொடங்கும். விரைவில் சசிகலாவையும் சந்திப்பேன்” எனக் கூறினார்.

 

 

MUST READ