Homeசெய்திகள்அரசியல்"இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது" - ஓபிஎஸ்

“இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது” – ஓபிஎஸ்

-

- Advertisement -

பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்னை எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம்

we-r-hiring

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியை சிறப்பாக வழி நடத்தியவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் யாராலும் வெல்ல முடியாத சக்தியாக அதிமுகவை வளர்த்தவர். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அதிமுகவை மாற்றியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தின் தொண்டராக இருப்பதே பெருமை என்பதை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினார்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம்.

கட்சியின் தலைமையை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். தொண்டர்கள் மூலம்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்தோம். தேர்தல் சின்னத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இருந்தால்தான் பெறமுடியும். அதிமுகவின் சட்ட விதியை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்துவிட்டனர். சர்வாதிகார போக்கில் பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டன. அவரின் பெயரை உச்சரிக்ககூட நான் விரும்பவில்லை. அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார்

அதிமுக சட்ட விதிகளை காப்பதற்காக தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. இரட்டை இலை இருக்கும் இடத்தில் நாம் இருப்போம் என நினைக்கிறார்கள். 2026 வரை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது” எனக் கூறினார்.

MUST READ