ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்- செல்லூர் ராஜூ
ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியக் கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஜெயலலிதாவை அவமதித்த அண்ணாமலைக்கு எதிராக ஜெயக்குமார் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். மாவட்ட செயலாளர் கூட்டம் தற்போது நடைபெற உள்ளது. கட்டுக்கோப்பான இயக்கம் அதிமுக. ஆனால் பாஜக கட்டுப்பாடற்ற கட்சி. பாஜகவில் மாநில தலைவர் பதவி என்பது பொம்மை பதவி. பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். கோமாளியாகவும் வைக்க முடியும். ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “ஜெயலலிதா உயிரினும் மேலான தலைவி. தெய்வமாக வணங்கக்கூடியவர். ஜெயலலிதாவுக்கு யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.


