Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்

ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்

-

ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்

காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் புகார் மனு அளித்தனர்.

OPS

அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த களியனூரில் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்த க்கூடாது பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா.சுதாகரிடம் புகார் மனுவை அளித்தனர்.

MUST READ