spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் - அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுரை

பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் – அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுரை

-

- Advertisement -

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள் நம் பிள்ளைகளுக்கு என்று தனி திறமை உள்ளது அதை கண்டறிய வேண்டியது நம் ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அம்பத்தூரில் பெருத்தலைவர் காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது அதில்  மாநில பள்ளி கல்வித்துறை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டி பேசினார். இந்த பள்ளியில் இருந்து மருத்துவ படிப்புக்கு  தேர்வாகியுள்ள மாணவர்களை பாராட்டியும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி அமைச்சர் வாழ்த்துரை வழங்கினார்.

we-r-hiring

அப்போது அவர் பள்ளிக்கு வந்து கல்வி கற்று செல்கின்ற மாணவர்கள் நான் நல்ல மார்க் வாங்கினேன், சிறந்த கல்லூரியில் சேர்ந்து இருக்கிறேன் என்பதை காட்டிலும் நல்ல ஒழுக்கத்தை இந்த பள்ளியில் நான் கற்றுக் கொண்டேன் என்ற பெருமையே வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் அதற்கு காரணம் நல்ல ஆசிரியர்கள் என்றார்.

எந்த வகையிலும் நம் பிள்ளைகளை உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் அவருடன் பழகுங்கள். அதுவே அவர்களை சிறந்தவர்களாக மாற்றும். மேலும் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்கள் மட்டுமே உங்களை மதிப்பீடு செய்யாது, வாழ்க்கையில் மதிப்புகளை பெறுகின்ற இடமாக இது போன்ற கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் ஆகும். பள்ளிக்கு வந்து கல்வி கற்று செல்கின்ற மாணவர்கள் நான் நல்ல மார்க் வாங்கினேன் சிறந்த கல்லூரியில் சேர்ந்து இருக்கிறேன் என்பதை காட்டிலும் நல்ல ஒழுக்கத்தை இந்த பள்ளியில் நான் கற்றுக் கொண்டேன் என்ற பெருமையே வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் அதற்கு காரணம் நல்ல ஆசிரியர்கள் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் பள்ளி மாணவர்கள் கல்வியோடு சேர்ந்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் சூழலில் தலைவர் காமராஜர் பெயரில் உள்ள இந்த பள்ளியில் பயின்று சிறந்த மாணவர்களாக நீங்கள் அனைவரும் வளர வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு சாமுவேல் ஜோசப் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு ராமன் தலைமை ஆசிரியை வனிதா ராணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

MUST READ