Homeசெய்திகள்அரசியல்ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் 

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் – ஆர்.பி.உதயகுமார் 

-

- Advertisement -

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் – ஆர்.பி.உதயகுமார் 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவில் தொண்டனாக சேர்ந்து விட்டு அதன் பிறகு வேண்டுமானால் ஜெயலலிதாவின் புகழை பாடட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு கிராமத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜெயலலிதா இந்துத்துவா கொள்கை முன்வைத்து சென்றதாகவும் அவரது மறைவுக்கு பின் அதிமுகவில் அந்த கொள்கை எடுபடவில்லை என்றும் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், நான் மறைந்த பின்னாலும் அதிமுக தமிழகத்தில் நூறாண்டுகள் சிறப்பாக மக்கள் பணியாற்றும் என ஜெயலலிதா கூறியதை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதற்கான அச்சாரமாக தான் நாடாளுமன்ற தேர்தலும் அமைந்துள்ளது.

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் 

ஆனால் ஒருவரை நினைத்தால் புகழ்வதும், நினைத்தால் இகழ்வதும் ஒரு சிலருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் கொள்கையை எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும் அதற்கு உயிர் தியாகம் செய்யக்கூடிய தொண்டர்களும் உள்ளனர்.

அண்ணாமலை போன்றவர்களின் தேவை அதிமுகவுக்கு எப்போதும் தேவைப்படாது. வேண்டுமானால் அவர் அதிமுகவில் தொண்டனாக தன்னை இணைத்துக் கொண்டு அம்மாவின் கொள்கையை ஏற்றுக் கொண்டு புகழ் பாடட்டும். அவர் அவருடைய தலைவரான வாஜ்பாய், அத்வானி அவர்களது சாதனைகளைச் சொல்ல வேண்டும். வீர சாவர்க்காரின் சாதனைகளை சொல்ல வேண்டும். அந்தக் கொள்கையை வைத்து மக்களை கவர வேண்டும். அதன் மூலமாக மக்களிடையே நம்பிக்கை பெற வேண்டும்.

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் 

அதை விடுத்து அண்ணாமலை போன்றவர்கள் ஜெயலலிதா புகழ் பாடுவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அதில் உள்நோக்கம் உள்ளது. அரசியல் நோக்கம் இருக்கிறது. ஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மையுடன், கருணை உள்ளத்தோடு வாழ்த்துபவர்களை பாதம் பணிந்து நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பாராட்டுவதில் கூட, வாழ்த்துதில் கூட அரசியல் உள்நோக்கம் இருக்கும்போது, சூட்சமம் இருக்கும் போது அதை அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும் என்று கூறினார்.

MUST READ