அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்ட நாள் கனவு இன்று நினைவாகி கொண்டிருக்கிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமா்சனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்டநாள் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்களால் நேசிக்கப்பட்ட வலுவான தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று மீண்டும் பிளவின் விளிம்பில் நிற்கிறது.
இந்திய அரசியலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த பல பிராந்திய கட்சிகளின் நிலை என்ன ஆனது என்பதை நாடு பார்த்திருக்கிறது. சிவசேனை உடைந்தது. ஜேட்யூ பலவீனமடைந்தது. அடுத்த இலக்கு அதிமுகவா என்ற கேள்வி இன்று எழுகிறது. நண்பர்களை முதலில் அழித்துவிட்டு, பின்னர் அவர்களின் இடத்தை கைப்பற்றுவது தான் பாஜகவின் அரசியல் முறை. Parasite politics” மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளாா்.
மெரினாவில் மீண்டும் அரசியல் அதிரடி: ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் தலைவர்கள் – தொண்டர்கள் உற்சாகம்!

