Homeசெய்திகள்அரசியல்தற்காலிக சபாநாயகர் அறையில் பதவியேற்ற சி.வி.சண்முகம்…

தற்காலிக சபாநாயகர் அறையில் பதவியேற்ற சி.வி.சண்முகம்…

-

- Advertisement -

சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார்.தற்காலிக சபாநாயகர் அறையில் பதவியேற்ற சி.வி.சண்முகம்…

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே மக்கள் நலனை முன்னிறுத்திய மூன்று முக்கிய திட்டங்களில் விஜய் கையெழுத்திட்டது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.

பின்னர் சட்டப்பேரவைக்கு சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபட்டார். சட்டப்பேரவை அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து சமூகநீதி இயக்கத் தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய அவர், பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுகவைச் சேர்ந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம், அவை கூட்டத்தின்போது பதவியேற்காமல் இருந்த நிலையில், பின்னர் தற்காலிக சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டார். மேலும், தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தொடர முடிவு செய்துள்ளார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 107 ஆக குறைந்துள்ளது.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் யார்? – 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…

MUST READ