தேமுதிகவுடன் இதுவரை கூட்டணிப் பேச்சு நடத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவுடன் இதுவரை கூட்டணிப் பேச்சு நடத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேமுதிகவுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசி வருகிறார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்த நிலையில், நயினாா் நாகேந்திரன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக பொருளாளர் சுதீஷுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என்று குடியரசு தினத்தில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தின்போது சுதீஷுடன் பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், பெரும்பான்மையாக யாா் வெற்றி பெறுகிறாா்களோ அவா்கள் தான் அமைச்சரவையை அமைப்பாா்கள். கூட்டணி ஆட்சிதான் பாஜகவின் நிலைப்பாடா என்ற கேள்விக்கு நயினாா் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளாா்.



