முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகின்றனா் என வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளாா்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தற்போது மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், ஒ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.

மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்தார். திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தபோது அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், செய்தியாளா்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அதிமுகவில் இணைய விருப்பமில்லை. தோ்தல் நெருங்கும் நிலையிலும் முடிவு எடுக்க தாமதம் ஆனதால் ஓ.பன்னீா் செல்வத்தை விட்டு விலகினேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை. அதிமுகதமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இருக்கிறாா். அண்ணாவின் தாய்க் கழகமான திமுகவில் இணைந்துள்ளேன். திமுக தான் தமிழ் நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது.
திமுகவில் இருந்து வந்ததுதான் அதிமுக. திராவிட இயக்கம் சமூக நீதிக்கழகம், திமுக தாய்கழகம். மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்த கழகம் திமுக, என்றார். அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது. இன்னும் நிறைய பேர் திமுகவிற்கு வர உள்ளனர். முதலமைச்சர் தலைமையில் தஞ்சையில் 26ம் தேதி இணைப்பு விழா நடைபெற உள்ளதாக தெரிவித்தார். டிடிவி தரப்பில் தனிப்பட்ட முறையில் தன்னை இணைவதற்கு அழைத்ததாகவும், தான் செல்லவில்லை என்றும், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன், அவர்களின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை, என தெரிவித்தார்.
அதிமுகவை பாஜக முழுமையாக கட்டுப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு மனசாட்சியை தொட்டு நீங்களே பதில் சொல்லுங்கள் என பதிலளித்த வைத்திலிங்கம் பதில், ஓபிஎஸ்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஓபிஎஸ்க்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை, அண்ணன் நல்ல முடிவை எடுப்பார்” என பதிலளித்தார்.
அதிமுகவில் இருந்த போது அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அந்தர் பல்டி அடித்த டி.டி.வி.தினகரன்… கூட்டணி குறித்த அறிவிப்பு…


