Homeசெய்திகள்அரசியல்உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை- ஈபிஎஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை- ஈபிஎஸ்

-

- Advertisement -

உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை, தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps

we-r-hiring

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி தூங்காமல் இருந்தேன். கலங்கி போயிருந்தேன். அச்சத்துடன் இருந்தேன். தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி. டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த உடனேயே சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. அதிமுகவை உடைக்க நினைத்த எட்டப்பர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. இனி அதிமுக ஒரே அணிதான். மூன்றாக உள்ளது. நான்காக உள்ளது என சொல்ல வேண்டாம். மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அதிமுக. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள், முடக்க நினைத்தவர்கள், திமுகவின் பீ டீம் ஆக செயல்பட்டவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது.

அதிமுக குடும்ப கட்சி கிடையாது, மக்களுக்காக உழைக்கும் கட்சி. ஒன்றாக தொண்டர்கள் தலைமையில் அதிமுக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதிமுக ஒன்றாக இருக்கிறது என்ற வார்த்தையை குறிப்பிடுங்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்குத் தான் ஓட்டு. வாக்காளர்களை அடைத்துவைத்து பிரியாணி கொடுத்தாலும், அவர்கள் எங்களுக்குதான் ஓட்டு போடுவார்கள்” எனக் கூறினார்.

MUST READ