தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகி பொன்னையன், இல்லை என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து அதிமுகவில் பிரிந்து இருக்ககூடிய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது.

பழனிசாமியை அண்ணாமலை சந்தித்து பேசிய நிலையில் பாஜக எதிராக பழனிசாமி தரப்பில் பொன்னையன் பேட்டியளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பாஜக விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
வடமாநிலங்களில் பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும். நட்பு கட்சிகளின் ஆட்சியை பாஜக எப்படி எதிர்த்தது என்பது எங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்துவிட்டது. பாஜக தனித்துதான் போட்டியிட்டது” எனக் கூறினார்.
