Homeசெய்திகள்அரசியல்விஜய்க்கு ஆளுநர் அவகாசம் தர வேண்டும் – வீரபாண்டியன்

விஜய்க்கு ஆளுநர் அவகாசம் தர வேண்டும் – வீரபாண்டியன்

-

- Advertisement -

தவெக பெரும்பான்மையை பேரவையில்  நிரூபிக்க அரசியலைப்புச் சட்டப்படி அவகாசம் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.விஜய்க்கு ஆளுநர் அவகாசம் தர வேண்டும் – வீரபாண்டியன்2026 ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, மே 4 ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியானது. தவெக தனித்து போட்டியிட்டு அதில் 108 இடங்களை பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுவதால், தவெக தலைவா் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறாா். தனிப்பெரும்பான்மையை நிரூபித்து வரும்படி ஆளுநர் அர்லேகா்  கூறியிருந்தாா். அதன்படி தவெக தலைவா் விஜய் பல்வேறு கட்சிகளுடன் ஆதரவு திரட்டும் முயற்சியில் காங்கிரஸின் ஆதரவை பெற்று, 112 இடங்களை பெற்றாா். இன்னும் ஆட்சி அமைக்க 6 இடங்களே தேவைப்படுவதால், இது குறித்து ஆளுநரை சந்தித்து தனது தரப்பு விளக்கங்களை முன்வைத்தாா். இதில் ஆளுநருக்கு திருப்தியில்லை என்பதால் விஜய் ஆட்சியமைப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், “பதவியேற்கும் முன்பு தவெக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. தவெக பெரும்பான்மையை பேரவையில்  நிரூபிக்க அரசியலைப்புச் சட்டப்படி அவகாசம் தர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநா் செயல்பட வேண்டும் என   இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

விஜய் ஆட்சிக்கு 6 மாதங்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

we-r-hiring

 

MUST READ