டெல்லியில் இடைவிடாது பெய்து வரும் மழை! – மழையிலும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரது 92 வயதில் நேற்று இரவு காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உடல் நல குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடலானது நேற்று நள்ளிரவு டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள முன்னாள் பிரதமர்களுக்கான அரசு இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நேற்று நள்ளிரவு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடும் குளிர் நிலவும் டெல்லியில் அதிகாலை முதல் இடைவிடாது மழையும் பெய்து வருகிறது. மழை பெய்து வரும் சூழலிலும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற மன்மோகன் சிங் மறைவிற்கு தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்துவதோடு அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் நிலவி வரும் குளிருக்கு இடையே மழையும் பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தங்களது அஞ்சலியை செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள். டெல்லியில் இடைவிடாது பெய்து வரும் மழை! – மழையிலும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரது 92 வயதில் நேற்று இரவு காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உடல் நல குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடலானது நேற்று நள்ளிரவு டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள முன்னாள் பிரதமர்களுக்கான அரசு இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று நள்ளிரவு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடும் குளிர் நிலவும் டெல்லியில் அதிகாலை முதல் இடைவிடாது மழையும் பெய்து வருகிறது. மழை பெய்து வரும் சூழலிலும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற மன்மோகன் சிங் மறைவிற்கு தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்துவதோடு அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் நிலவி வரும் குளிருக்கு இடையே மழையும் பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தங்களது அஞ்சலியை செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.