spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பறிபோகிறதா இரட்டை இலை சின்னம்..? பதற்றத்தில் எடப்பாடியார்..!

பறிபோகிறதா இரட்டை இலை சின்னம்..? பதற்றத்தில் எடப்பாடியார்..!

-

- Advertisement -

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?

we-r-hiring

எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஆணையம் விசாரிக்க தடை விதிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் விசாரிக்க விதித்த தடையை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. வருகிற 2026ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சமயத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார். தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

அதாவது, எடப்பாடி பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருக்கும் போதெல்லாம் தேர்தல் ஆணையம் அவருக்கு சாதகமாக செயல்பட்டாக கூறினார்கள். தற்போது, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அடித்துக் கூறிவரும் நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்பிற்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட நிலை தமிழகத்தில் எடப்பாடி தரப்பிற்கு வரலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

MUST READ