Homeசெய்திகள்அரசியல்அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அமைச்சர் காமராஜ்

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அமைச்சர் காமராஜ்

-

அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அமைச்சர் காமராஜ்

அதிமுகவிற்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

kamaraj admk

தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க தர்பூசணி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், “அதிமுக என்பது எடப்பாடி தலைமையிலானது என்று நீதிமன்றமும், நிர்வாகிகளும், தொண்டர்களும் முடிவு செய்து விட்டார்கள். ஓபிஎஸ் அணி திருச்சியில் 24 ம் தேதி முப்பெரும் விழா நடத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக கூறுகிறார்கள். இதனை கேட்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இரட்டை இலை எடப்பாடியிடம் தான் உள்ளது. ஆகையால் யாராலும் முடக்க முடியாது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், எனவே அங்கு நிலக்கரி எடுக்க முடியாது. இதுதொடர்பாக அனைத்து எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.

MUST READ