Homeசெய்திகள்அரசியல்பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்

பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்

-

பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் போன்று ஈபிஎஸ் கண்ணாடி, தொப்பி அணிந்ததைப் பார்த்து அதிமுக தொண்டர்கள், மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்ட போதெல்லாம் சரியான தீர்ப்பை மக்கள்தான் வழங்கினார்கள். அதிமுக பிரச்சனைக்கு முடிவு காண மக்களிடம் செல்ல இருக்கிறோம். வரும் 24ம் தேதி திருச்சியில் முப்பெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றனர் எங்களது மாநாட்டின் மூலம் நிரூபணமாகும்.  எம்ஜிஆர் , ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழாவை குறிப்பிடும் வகையில் அந்த மாநாட்டை முப்பெரும் விழாவாக நடத்த உள்ளோம். ஈபிஎஸ் தரப்பு கூட்டும் எந்த செயற்குழுவும் சட்டவிரோதமானது.

அதிமுக சார்பில் கர்நாடக தேர்தலில் நாங்கள் வெற்றி வேட்பாளரை நிறுத்த போகிறோம். இந்த உலகம் உள்ளவரை அதிமுக இருக்கும் , அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே இருப்பார். சர்வாதிகார அடிப்படையில் அவர்கள் பொதுச்செயலாளர் என அறிவிப்பு செய்து கொண்டுள்ளனர். நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறவில்லை , தலைவர் , ஒருங்கிணைப்பாளர் போல ஏதேனும் ஒரு உச்சபட்ச பதவிக்கு தேர்தல் வைத்தால் அதில் போட்டியிட தயார் என்றுதான் கூறினோம். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்” என்றார்.

MUST READ