Homeசெய்திகள்அரசியல்இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி- இரட்டை இலை யாருக்கு?

இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி- இரட்டை இலை யாருக்கு?

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

eps ops

we-r-hiring

இன்று மாலை வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. ஒற்றை தலைமை விவகாரம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கலும் உள்ள நிலையில் இடைத்தேர்தலை அதிமுக சந்திக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட கே.வி.ராமலிங்கம் அல்லது தென்னரசுவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை நிறுத்தினால் அதிமுக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படும். சென்னையில் ஜனவரி 23-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணி 23-ல் நடக்கும் கூட்டத்தில் முடிவெடுக்கும்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் இரண்டாம் நாளாக சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது. 238 வாக்கு சாவடி மையங்களுக்காக 500 மின்னணு வாக்குபதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு வருவாய் கோட்டாச்சியர் சதீஸ்குமார் தலைமையில், பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் ஈவிஎம் இயந்திரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

MUST READ