Homeசெய்திகள்அரசியல்இரட்டை இலை சின்னத்திற்கு பழனிசாமி இழுக்கு - டி.கிருஷ்ணமூர்த்தி

இரட்டை இலை சின்னத்திற்கு பழனிசாமி இழுக்கு – டி.கிருஷ்ணமூர்த்தி

-

- Advertisement -
இரட்டை இலை சின்னத்திற்கு பழனிசாமி இழுக்கு – டி.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு இடைத் தேர்தலில் 66,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி இழுக்கு ஏற்படுத்தி விட்டதாக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே, 500க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கமிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள், கைகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக விற்கு எந்த துரோகமும் செய்யவில்லை எனவும் துரோகம் செய்ததெல்லாம் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தொண்டர்கள் புரிந்து கொண்டு பழனிசாமிக்கு எதிராக தாமதிக்காமல் போராட்டம் தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க திமுகவிற்கு கோரிக்கை வைப்பதாகவும் திமுக அரசு நினைத்தால் 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும் என்றார்.

மிக விரைவில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இரட்டை இலை முடங்க கூடாது என ஒரே காரணத்திற்காக ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் வேட்பாளரை ஓபிஎஸ் வாபஸ் பெற்றார். நாங்களும் போட்டி போட்டு இருந்தால் இரட்டை இலை முடங்கியிருக்கும் என தெரிவித்தார்.

ஈரோடு தேர்தலில் 66,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரட்டை இலைக்கு இழுக்கை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.

MUST READ