spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!

திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!

-

- Advertisement -

பாமகவில் தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பொதுச்செயலாளர், செயலாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது திலக பாமா கட்சியில் இருந்து விலக வேண்டும் என வடிவேல் ராவணன் வலியுறுத்தல்.திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர். அதன் உச்சமாக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளார் திலகபாமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக திலகபாமா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வடிவேல் ராவணன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

we-r-hiring

அதில், திலகபாமா கட்சிக்கு நேற்று வந்நதவர் என்றும், கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவர் என்று விமர்சித்துள்ளாா். மேலும் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு திலகபாமா எனவும், பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்கிருமி, நெஞ்சிலே வஞ்ச எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலக பாமாவை வன்மையாக கண்டிக்கின்றேன் என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளஅவர்,திலக பாமா கட்சியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளாா்.

இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்

MUST READ