தமிழகத்தில் உள்ள மற்ற தலித் இயக்கத் தலைவர்கள், ஒன்றிரண்டு சீட்டுக்காக, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு துதி பாடுவார்கள். அவர்களை போல நமது பகுஜன் சமாஜ் கட்சி இல்லை. ஆவடி அருகே நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வரும் தேர்தலில், தமிழக மக்களுக்கு நாம் யார் என்று தெரிவிக்க வேண்டும் என மாநிலத் தலைவர் ஆனந்தன் நிர்வாகிகள் மத்தியில் சூளுரைத்துள்ளாா்.
ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கௌதம் எம் பி மற்றும் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டாா்கள். கட்சி கட்டமைப்பு பலப்படுத்துதல், ஒற்றைத் தலைமையில் இயங்குதல், மாநிலத் தலைவர் ஆனந்தன் தலைமையில் கட்சியை பலப்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மற்றும் விரைவில் திருச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில தலைவர் ஆனந்தன் சிரமமான சூழலில் தான் கட்சி தலைமை பொறுப்பேற்றேன். பகுஜன் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் என்று இணைந்தாரோ, அன்று முதல் அவருடன் இணைந்து கட்சிப் பணியை செய்து வருகிறேன். ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்து குழி பறித்தவர்கள் ஏராளமானவர்கள். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்தது குறித்து தெரிந்து கொண்ட மாயாவதி, இது அரசியல் படுகொலை என்று அன்றே கூறினார். மாநில அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை ஏன் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள மற்ற தலித் இயக்கத் தலைவர்கள், ஒன்றிரண்டு சீட்டுக்காக, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு துதி பாடுவார்கள். அவர்களை போல நமது பகுஜன் சமாஜ் கட்சி இல்லை. வரும் தேர்தலில், தமிழக மக்களுக்கு நாம் யார் என்று தெரிவிக்க வேண்டும் என சூளுரைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த பிஎஸ்பி மாநிலத் தலைவர் பி ஆனந்த் கூறுகையில், “எங்கள் தேசிய தலைமை உத்தரவின் படி தேர்தல் வருவதற்காக இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆகையால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த இரண்டு எம்பிகளும் மிகத் தெளிவாக எப்படி நான்கு முறை முதலமைச்சராக ஆட்சி அமைப்பதற்கு எப்படி வியூகம் வகுத்தார்களோ, அந்த தேர்தல் வியூகத்தை தமிழகத்தில் நடத்திக் காட்டுவோம் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை உயர்த்தி இந்த தேர்தலில் எங்களுடைய கணிப்பு பிரகாரம் நாங்கள் யார் என்று தெரிவிப்போம். அடுத்த தேர்தலில் நாங்கள் போட்டியாளராக இருப்போம். இன்னும் அடுத்து வரும் தேர்தலில் நாங்கள் ஆட்சியாளராக மாறுவோம் என்று உறுதி ஏற்று செயற்குழு நடத்தினோம் என்று தெரிவித்துள்ளாா்.