spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அரசியல் வில்லன் அண்ணாமலை..! பாஜகவில் அதிகாரத் துஷ்பிரயோகம்- சாவித்திரி சவுக்கடி..!

அரசியல் வில்லன் அண்ணாமலை..! பாஜகவில் அதிகாரத் துஷ்பிரயோகம்- சாவித்திரி சவுக்கடி..!

-

- Advertisement -

அண்ணாமலையின் தமிழக பாஜக தவி கிட்டத்தட்ட காலி என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அவரது செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் அதிர்ச்சிகரமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”போலிகளுக்கு தான் இன்றைய அரசியலில் மவுசு என்பது எழுதப்படாத விதி. ஹீரோக்களை போலவே வில்லன்களுக்கும் நம் சமூகத்தில் எப்போதுமே ஒரு மவுசு இருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் தன் அபார நடிப்பாற்றலால் அதிகம் ரசிக்கப்பட்டவர் எம்.ஆர்.ராதா.அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

we-r-hiring

ரஜினிகாந்த், சத்யராஜ், போன்றவர்கள் எல்லாமே கூட ஆரம்ப நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் மிகவும் விரும்பப்பட்டனர். இப்போதும் ரசிக்கப்படும் வில்லன்கள் நிறையவே உள்ளனர்.

இப்படியாக, அரசியல் வில்லன்களில் ஒருவராகவே தமிழக அரசியலில் அண்ணாமலை.இவரை ஏன் சிலர் கொண்டாடுகின்றனர் என்றால், ஊழலில் திளைக்கும் திராவிட இயக்க அரசியல்வாதிகளை இவர் எகிறி அடிப்பதே முக்கிய காரணம்.

திமுகவை எதிர்த்து பேசி விளாசுவது ஒன்றே தலைவனுக்கான தகுதியாக முடியுமா? மக்கள் பிரச்சினையில் அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை பல பிரச்சினைகளில் அவர் கண்டும், காணாமல் கடந்து செல்வதிலும், மத்திய அரசின் மக்கள் விரோத சட்ட, திட்டங்களை வரவேற்பதிலும் உணரலாம்.

அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது - அமைச்சர் ரகுபதி பேட்டி

திமுக அரசால் உருவான சில பிரச்சினைகளுக்கு அதிரடி அறிக்கை விடுகிறார். ஆனால், அறிக்கைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களோடு டீலிங் போட்டு, பற்பல ஆதாயங்களைப் பெற்று அடக்கி வாசிக்கிறார் என்கிற விமர்சனங்கள் உண்டு. தமிழக பாஜகவில் இந்த மாதிரி மத்திய அரசின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பதவியில் இல்லாமலே பற்பல பலன்களை பெற்ற ஒரு தலைவர் வேறெவரும் இல்லை.

சளைக்காமல் அதிரடி காட்டுவது, அநீதியை எதிர்ப்பது போல அறச்சீற்றம் காட்டுவது, நைச்சியமாகப் பேசுவது, உள்ளத்தில் யாரையும் மதிக்காத ஆணவம், அதே சமயம் பணிவானவர் போல காட்டும் போலித் தோற்றம் என மிகக் குறுகிய காலகட்டத்தில் அரசியல் அயோக்கியதனங்களில் பல பி.ஹெச்.டி பட்டங்களை வென்றவர் அண்ணாமலை.

முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் - அண்ணாமலை கண்டனம்

தன்னைச் சுற்றிலும் 420 களையே அதிகம் வைத்திருப்பவர். இவர் ஒரு அழிவு சக்தி. ஆக்கபூர்வமாக எதையுமே செய்யத் தெரியாதவர். அரவணைக்கும் பண்போ, அறவே கிடையாது. நம்பகத் தன்மை இன்மையால் கட்சியிலேயே கூட ஆத்மார்த்த நண்பர்கள் இவருக்கு இல்லை. எனினும், பல நூலிபான்கள் இவரை ‘ஓகோ’வெனக் கொண்டாடுகின்றனர். இவர் கட்சித் தலைவராக இல்லையென்றால், காணாமல் ஆகிவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ