லட்டு வீடியோ விவகாரத்தில் எச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி, சுதாகர். பரிதாபங்கள் யூடியூப் சேனல் நிர்வாகிகள் கோபி, சுதாகர் மீது ஆந்திர காவல்துறையில் அளித்த வழக்கை திரும்பப் பெற்றது பாஜக.
‘‘தமிழக பாஜக கேட்டுச்சா? இங்க எதிர் அணி பற்றி மைக்கில் பேசி ஊடக பேட்டி கொடுத்து மற்ற யூடியூப் மூலம் வெட்டி பேச்சு பேசி என்ன பயன்? உண்மை நிலவரம் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இதே நிலை… இதே திசையில் சென்றால் மோடிஜி நிலையும் பாஜக அலையும் பரிதாபங்கள்… இதுவே உண்மை’’


‘‘அதிமுக, பாஜக, நாதக, தவெக, பாமக, ஊடகங்கள்,1000+ யூடியூப் சேனல்கள்,பல ஆயிரக்கணக்கான வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தினம் திமுகவுக்கு எதிராக பொய்கள், குறைகள், நிர்வாக குளறுபடிகளை மக்களிடம் சேர்க்கிறார்கள்’’ என்கிற குமுறல்களுக்கெல்லாம் பின்னால் எதிர்கட்சிகளின் அஜெண்டா இருப்பதாக ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் கதறுகிறார்கள்.
‘‘அரசை குறை கூறுவதற்கென்றே கோடிகளை கொட்டி பாஜக புது திட்டம் தீட்டிட்டு இருப்பதாக விவாதங்கள் கிளம்பி உள்ளன. தமிழகம் முழுவதும் 100 யுடியூப் சேனல்களை திறக்க, தமிழக பாஜக தலைமை திட்டம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. திமுக அரசை தினமும் குறைகூறி ஏதாவது போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ஒரே நிபந்தனையாம். கற்பனையாக என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் குறை சொல்வதில் எந்தக் குறையும் ஒரு குறை இருக்கக்ககூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் மெதுவாக நடக்கிறார்… கண்டுகொள்ளாமல் வேகமாக நடக்கிறார்… அது சரியில்ல.. இது சரியில்ல என எதையாவது போட்டு நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு யுடியூப் சேனலுக்கு மாதம் மூன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க கட்டணம் நிர்ணயித்து இருப்பதாகவும் தகவல். நூறு சேனலுக்கு இப்படி மூன்றரை கோடி ரூபாயை அள்ளி வீசி தமிழக அரசுக்கு எதிராக விமர்சிக்க யூடியூப் சேனல்களை பிடித்து வருகிறார்கள் என்கிற தகவல் அறிந்து பல யூடியூப் நிர்வாகிகள் க்யூ கட்டி தயாராகி வருவதாகவும் தகவல் தாறுமாறாக உலா வருகிறது.