Homeசெய்திகள்அரசியல்நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம்- சசிகலா

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம்- சசிகலா

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

sasikala

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் வி.கே. சசிகலா மக்களுக்கு தையல் மிஷன், இஸ்திரி பெட்டி, இட்லி குண்டா, தள்ளு வண்டி, ஹாட்பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் ஜெயலலிதா வரலாறு புத்தகத்தை வெளியிட்டார்.

we-r-hiring

அப்போது மேடையில் பேசிய சசிகலா, “அதிமுகவை எளிதாக யாரும் அழித்து விடவோ, அபகரித்து விடவோ எண்ணினால் தோல்வியை தான் அடைவார்கள். இந்த இயக்கம் எத்தனையோ பேரின் உயிர் தியாகத்தால் உருவான இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிரமபட்டு உருவாக்கிய இயக்கம். இதை அவ்வளவு எளிதாக யாரும் அழித்து விடவோ அபகரித்து விடவோ எண்ணினால் தோல்வியை தான் அடைவார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பு 80 பக்கத்தை வக்கீல்கள் பார்த்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பார்கள். இந்த வழக்கில் எனக்கு சம்பந்தம் இல்லை.

இது மற்ற 2 பேர் போட்ட வழக்கு. என்னுடைய வழக்கு சிவில் நீதிமன்றத்தில் உள்ளது. அதிமுகவில் தனி மனிதர் யாரும் முடிவு எடுக்க முடியாது. கீழ் மட்ட கழக தொண்டர்களின் முடிவு தான் இறுதி. இந்த தீர்ப்பினால் யாருக்கும் பின்னடைவு இல்லை. இதில் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் பின்னடைவு என்று நினைக்க வேண்டியதில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கூட்டியே சுற்றுப்பயணம் தொடங்கப்படும். பயணத்தை தொடங்கி மக்களை சந்திப்பேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நிச்சயமாக அதிமுகவில் அனைவரும் ஒரணியில் சேருவார்கள். மக்கள் நம்பி வாக்களிப்பார்கள். சொன்னதை நிச்சயமாக செய்வோம்” என கூறினார்.

MUST READ