Homeசெய்திகள்அரசியல்முதல்வன் படம்போல் ஒருநாள் முதல்வன் வாய்ப்பு கொடுங்க- சீமான்

முதல்வன் படம்போல் ஒருநாள் முதல்வன் வாய்ப்பு கொடுங்க- சீமான்

-

- Advertisement -

அர்ஜுன் நடித்த படம் போல் ஒரு நாள் மட்டும் சாம்பிளாக முதலமைச்சர் பதவி கொடுங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுங்கள் ஒரே ஒரு நாள் மட்டும் ப்ளீஸ் என தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கெஞ்சி பேசினார்.

seeman

we-r-hiring

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் உடன் திறந்த வெளி வாகன பிரச்சாரத்தில் ஊர்வலமாக சென்று விவசாய சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பின்னர் சூரம்பட்டி நான்கு ரோட்டில் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்பரை கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய சீமான், “இந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கும் போது இந்த மண் வெள்ளைய ஏகாதிபத்தியத்தில் இந்த நிலம் அடிமைப்பட்டு கிடைக்கிற போது விடுதலைக்காக போராடியவன் பாகிஸ்தானும் பங்களாதேஷும் தான் அடிமைப்பட்டு கிடக்கும் போது ஒரு போராட்டத்தை கூட இந்த மண்ணின் விடுதலைக்காக போராடாதவன் பாஜகவிலும் ஆர்எஸ்எஸிலும் இருக்கிறான். இது இல்லை என்று யாரையாவது ஒருவனை மறுத்து பேச சொல்லுங்கள், பார்த்து விடுகிறேன், அந்த அடிமை நிலத்தின் விடுதலைக்காக போராடியவன் பாகிஸ்தானும் பங்களாதேஷும் இவனுக்கு பகைவன். அர்ஜுன் நடித்த படம் போல் ஒரு நாள் மட்டும் சாம்பிளாக முதலமைச்சர் பதவி கொடுங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுங்கள் ஒரே ஒரு நாள் மட்டும் ப்ளீஸ்…” என கெஞ்சினார்.

MUST READ