spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ

அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ

-

- Advertisement -

அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ

அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

Nothing for people in DMK rule, alleges Sellur Raju

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது. பாஜகவினருக்கு இதனை ஏற்க ஜீரண சக்தி இல்லை. ஊர்க்குருவி உயரப் பறந்தாலும் பருந்தாகாது. அதுபோல எவனாலும் ஜெயலலிதாபோல ஆக முடியாது. மக்களுக்காக அவதாரம் எடுத்து, மக்களுக்காக உழைத்து, மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் ஜெயலலிதா. சிலர் மூன்று பட்டம் வாங்கிவிட்டால் தன்னை பெரிய ஆள் என நினைத்துக் கொள்கிறார்கள்.

we-r-hiring

அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணைந்த போது கசக்கிறதா? பாஜகவினரிடம் சகிப்பு தன்மை இல்லை. மத்தியில் ஆளுகின்றோம் என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ளக் கூடாது” எனக் கூறினார்.

MUST READ