அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று திமுகவில் முதலமைச்சர் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாட்டில் பிறந்தவா் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதியில் 2001-2011 வலை தொடா்ந்து 3 முறை அதிமுக எம்.எல்.ஏவாக தோ்வாகி அமைச்சராகவும் இருந்தாா்.
அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல், வீட்டு வசதி துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் வைத்திலிங்கம்.

2021 சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
2001, 2006, 2011, 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வைத்திலிங்கம்.
2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த வைத்திலிங்கம் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆக தேர்வானார்.
2021 சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதால் ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுகவில் ஈ.பி.எஸ் அணி ஓபிஎஸ் அணி என உருவான பின் ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த வைத்திலிங்கம், இன்று திமுகவில் இணைந்துள்ளது மிகமுக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
மறைந்த தலைவர்கள், பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு…
