spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

we-r-hiring
அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்துடன் பதவி ஏற்பு விழா தொடங்கியது.

ராஜ்பவனில் நடைபெறும் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவிற்கு 180 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்பவனில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு, எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், சக்கரபாணி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு சார்பில் வழங்கப்படவுள்ள வாகனம் தயார் நிலையில் இருக்கிறது.

MUST READ