Homeசெய்திகள்அரசியல்எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும்...

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

-

சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பசுமை தாயகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. எண்ணூர் நேரு நகர் சிவன் படை  குப்பம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து எண்ணூர் பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

“சமீபத்தில் சென்னையில் தாக்கிய மிக்ஜாம்  புயலுக்கு பிறகு எண்ணூர் பகுதியில் பெரும் அளவில் எண்ணெய் மற்றும் ரசாயன கழிவால் பாதிக்கப்பட்டுள்ளது,  இந்த எண்ணெய் கசிவுக்கு காரணம் யார் என்று இன்னும் அரசு கண்டறியவில்லை. இந்த கசிவு ஏற்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அரசு விழித்துக் கொண்டு இங்கு வந்துள்ளார்கள். இங்கு கலந்துள்ளது கச்சா எண்ணெய் கசிவா ரசாயன கசிவா இது மக்களுக்கு புரியவில்லை. எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கொடுக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் விலங்குகளுக்கும் மீன் வகைகளுக்கும் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் கேடு இந்த கசிவால் ஏற்படும்.

உலக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் டெக்னாலஜிகள் உள்ளன ஆயில் எடுப்பதற்கான தொழில் நுட்ப இயந்திரங்களை பயன்படுத்திருக்க வேண்டும் பேரிடர் காலத்தில் இது போன்ற பாதிப்பு எண்ணெய் கசிவு ஏற்படும் அதற்கு  கமிட்டி அமைத்து இருக்க வேண்டும் ஆனால் இன்று வரை அமைக்கவில்லை.  இது போன்ற பேரிடர்கள் இயற்கை சீற்றங்கள் காலநிலை மாற்றத்தால் வரும் காலத்தில் அடிக்கடி வரும் கால இடைவெளியும் குறையும்.  சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெரும் வெள்ளம்   வந்தது அதன் பிறகு பசுமைத்தாயகம் சார்பில்  ஆவணத்தை தயாரித்து அன்று எச்சரிக்கை விடுத்தோம். அடுத்து சென்னையில் வெள்ளம் பத்தாண்டுகளுக்கு பிறகு வரும் என்று சொல்லியிருந்தோம். ஆனால். 8 ஆண்டுகளில் வந்துவிட்டது என்றும் நான் சொல்லுகின்றேன் அடுத்த பெரும் வெள்ளம் சென்னையை தாக்கும்  ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் வரும் அதற்கு அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

எண்ணூர் எண்ணெய் பாதிப்பு  ரசாயன கழிவு கச்சா எண்ணெய் கசிவா இதற்கு யார் காரணம் என கண்டறிய வேண்டும்.எண்ணூர் பகுதியில் 25க்கு மேல் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  அதில் 17 நிறுவனங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது சிபி சிஎல் மத்திய அரசு நிறுவனம் ஆனால் சிபிசிஎல் தான் இதற்கு காரணம் என்று  கூறவில்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனை கண்டறிய ஓய்வு பெற்று நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு  அமைக்க வேண்டும். இல்லையென்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் அந்த அளவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இங்கே உருவெடுத்து உள்ளது.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அந்த குழு ஒரு மாதத்திற்குள் இடைக்கால அறிக்கை மூன்று மாத த்தில் முழு அறிக்கை கொடுத்து இதற்கு யார் காரணம் என்ன செய்திருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் எவ்வளவு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த நிவாரணம் கேலியாக இருக்கிறது இவ்வளவு பெரிய எண்ணெய் கசிவு நடந்திருக்கிறது.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னையில் இரண்டு கப்பல்கள் மோதி எண்ணெய் கசிவு ஏற்பட்டது அதற்கு 240 கோடி ரூபாய் அறிவித்து பசுமை தீர்ப்பாயம் கொடுத்துள்ளது. ஆனால் இதற்கு எட்டே முக்கால் கோடி ரூபாய் அறிவித்துள்ளது வேதனையாக உள்ளது. வடசென்னை மக்கள் மிகவும் பாவப்பட்ட மக்கள் இங்கு எண்ணூரில் நான் மருத்துவம் பார்க்க போது அதிக மக்களுக்கு மூச்சு திணறல் சுவாச கோளாறு சர்ம வியாதி அதிகமாக ஏற்பட்டுள்ளது.  தமிழக அரசு அறிவித்த நிவாரணம்  ஏற்க முடியாது மிகவும் மோசமானது.

எண்ணூரில் இருக்கின்ற பிரச்சனை தனிப்பட்ட பிரச்சனை எண்ணெய் கழிவு தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மாநில அரசுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் இது மாநில அரசுதான் பொறுப்பு ஏற்று தட்டிக் கழிக்காமல்.  மத்திய அரசுக்கும் இதற்கு உதவ வேண்டும் மாநில அரசு பிரச்சனை என்று நினைக்க கூடாது. சிபிசிஎல் நிறுவனம் மத்திய அரசு நிறுவனம் மத்திய மாநில அரசுகள் இரண்டு அரசும் மக்களை காப்பாற்ற வேண்டும். பசுமை தீர்ப்பாயம் 2022 பாதுகாக்கப்பட்ட  சதுப்பு நிலப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.   ஆனால் இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் ஏற்படுத்தவில்லை.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை மக்களுக்கு  இயற்கை எத்தனை வரங்களை கொடுத்துள்ளது எண்ணூர் கொசஸ்த்தலை ஆறு அடையாறு கூவம்ஆறு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இதெல்லாம் சென்னைக்கு கிடைத்த வரம்.  ஆனால் கடந்த  60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளால்   அனைத்தும் சேதப்படுத்தி விட்டார்கள்.  காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றத்தால் தொடர்ந்து பேரிடர்கள் இயற்கை சீற்றங்கள் கடும் சூறாவளி பெரும் புயல் பெரும் வெள்ளம் இதெல்லாம் அடிக்கடி நாம் சந்திக்க இருக்கின்றோம்.

பெரும் சூறாவளியோ பெரும் புயலோ பெரும் வெள்ளத்தையோ தடுக்க முடியாது  ஆனால் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளை தடுக்க முடியும்.  தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் அதிக அளவில் பாதிப்பு. ஏற்பட்டுள்ளது இளைஞர்கள் உதவி செய்ய வேண்டும்.  உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் வீடுகள் கட்டித் தர வேண்டும்  அவர்கள் வாழ்வாதார மேம்படவும் கால்நடைகள் வாங்கித் தரவும் இளைஞர்கள் முன் வரவேண்டும். மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு  இருவரும் சேர்ந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய  வேண்டும்.

இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை ஒன்றிய அரசு சார்பாக எண்ணூருக்கு   வந்து மக்களை பார்வையிட வேண்டும் மக்கள் பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது 500 கோடி ரூபாய்   பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வாழ்வாதாரம் இருக்கப்போவது கிடையாது. ஆகையால் 500 கோடி ரூபாய்  இழப்பீடு வழங்க வேண்டும் நவீன இயந்திரங்களைக் கொண்டு ஆற்றை  சுத்தப்படுத்தி தர வேண்டும் வரும் காலம் சோதனையாக காலமாக இருக்க போகிறது. இது போன்ற பெரு வெள்ளம் மழை அடிக்கடி வரப்போகிறது என்ன செய்ய வேண்டும் என்று மக்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் அந்த நிலை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

வானிலை மையம் வெளிநாடுகளில் துல்லியமாக இரண்டு நாட்களுக்குப் பிறகு 12 மணியிலிருந்து ஒரு மணி நேரம் மழை பெய்யும் எவ்வளவு மழை பெய்யும் என்று அவர்கள் அறிவிப்பார்கள், கண்டிப்பாக மழை பெய்யும் இங்கேயே அதை அறிமுகப்படுத்தவில்லை. புதியதாக கட்டிடங்கள் நவீன இயந்திரங்கள் வாங்கிக் கொண்டு கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் துல்லியமாக அறிவிக்க முடியவில்லை. கிரிக்கெட் விளையாட்டில்  ஆஸ்திரேலியா  லண்டன் போன்ற நாடுகளுக்கு சென்றால்  இரண்டு மணிக்கு  மழை பெய்யும் என்று சொல்கிறார்கள் மழையும் பெய்கிறது.  ஏன் இந்த டெக்னாலஜியை நீங்கள் இங்கு கொண்டு வரவில்லை வரும் காலம் மிகவும் பாதிப்பான காலமாக இருக்கிறது அதற்கு வானிலை அறிக்கை முக்கிய காரணமாக இருக்கிறது அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்

MUST READ