Homeசெய்திகள்அரசியல்வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சி

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சி

வெறுப்புணர்வு பிரச்சார புகார்களை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காணொளி நீக்கப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்துக்களின் சொத்துக்களை கைப்பற்றி இஸ்லாமியர்களுக்கு பங்கிட்டு கொடுத்து விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்ததுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார்களுக்கு குனிந்தனர். இதனிடையில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சினை முன்வைத்து பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அனிமேஷன் காட்சி சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சி

இந்த வெறுப்புணர்வு காணொளியால் அதிர்ச்சி அடைந்த ஏராளமான பயனர்கள் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/a-5-year-old-boy-had-a-non-surgical-removal-of-an-led-bulb-stuck-in-his-lung-by-bronchoscopy/82656

 

 

வகுப்புவாத பரப்புரை வீடியோவுக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பாஜகவின் அதிகார பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காணொளி நீக்கப்பட்டுள்ளது. இதனை பாஜகவே நீக்கியதா அல்லது இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மேடாவின் தணிக்கை குழு அகற்றியதா என்று விவரங்கள் வெளியிடப்படவில்லை.

MUST READ