தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய வேண்டும் என்று ‘வீ ஆர் தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூர் ஒரு கருத்தைத் தெரிவித்தால், முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக அதற்கு எதிர்க்கருத்துத் தெரிவிக்கிறார். இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்குள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு முரண்பட்டுப் பேசுவதைவிட, மாணிக்கம் தாகூர் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணையலாம். அங்கு தனது கருத்துகளைத் தொடர்ந்து தெரிவிக்கட்டும். இது அவருக்கும் நல்லது; காங்கிரஸ் இயக்கத்துக்கும் நல்லது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், விலைவாசி உயர்வு இல்லை என்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவரே பேசி வருகிறார் என்றார்.
சகோதர பாசத்தில் விழுந்த விரிசல்: காங்கிரஸ் கூட்டணிக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்த பின்னணி!
