Homeசெய்திகள்தமிழ்நாடு5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல்...

5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம் அகற்றப்பட்டது

-

- Advertisement -

5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம்  தனியார் மருத்துவமனை அகற்றியுள்ளது.

சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை

சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் 1 மாதமாக மூச்சு திணறல், சளி,இரும்பல் போன்ற தொந்தரவுகளால் இருந்துள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அருகே உள்ள மருத்துவமனையில் அழைத்து சென்றுள்ளனர்.அங்கு ஸ்கேன் செய்ததன் மூலம் சிறுவன் தவறுதலாக விழுங்கிய எல்.ஈ.டி பல்ப்  நுரையீரலில்  சிக்கிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பல்பை நெஞ்சை பிளந்து அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை போருரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ராமச்சந்திரா மருத்துவமனை

அங்கு ட்யூப் மூலம் பல்பை அகற்ற முடிவு செய்து ப்ரான்ஸ்கோபி சிகிச்சை அளித்தனர்.மிகவும் சவாலான இந்த சிகிச்சையை மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர்  மது  உட்பட 6 மருத்துவர்கள் 2 மணி நேரச் சிகிச்சைக்கு பின் நுரையீரலில் சிக்கிக் கொண்டு இருந்த பல்பை லாவகமாக சிறுவனுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் அகற்றினர்.

பிராங்கஸ்கோபி

 

இதனால் சிறுவன் தற்போது எந்தவொரு பதிப்பும் இல்லாமல் வீடு திரும்பியுள்ளார்.இதுப் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் ஆனால் பிராங்கஸ்கோபி மூலம் பல்பை அகற்றி தனியார் மருத்துவமனை அசத்தியுள்ளது.அதுவும் இலவச சிகிச்சை மூலம் ஏழை சிறுவனுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ