Homeசெய்திகள்அரசியல்கண்ணுக்குத் தெரியாத ஆறு -அமைச்சர் பேச்சால் அவையில் கலகல

கண்ணுக்குத் தெரியாத ஆறு -அமைச்சர் பேச்சால் அவையில் கலகல

-

கண்ணுக்குத் தெரியாத ஆறு சரஸ்வதி ஆறு, நான் இதுவரைக்கும் இப்படி ஒரு இலாகாவை பார்த்ததே இல்லை என்று பேசி அவையை கலகலக்க வைத்தார் அமைச்சர் துரைமுருகன்.

நீர்வளம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறையின் அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் நடந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசுகையில், ’’திரிவேணி சங்கமம் என்று அலகாபாத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. யமுனையும் கங்கையும் ஒன்றாக ஓடும் . இன்னொரு ஆறு எங்கே என்று கேட்டால் அது கண்ணுக்குத் தெரியாது. அதுதான் சரஸ்வதி ஆறு . அது மாதிரி தொழில்துறையும் சிறு, குறு நடுத்தர தொழில் துறை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுது. கனிம வளத்துறையை பற்றி கேட்டால் சட்டப்பேரவையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. சபாநாயகருக்கும் தெரியவில்லை. ஒரே ஒரு ஆளுக்கு தான் தெரியுது . அது முன்னாள் அமைச்சர் தங்கமணி. அவர்தான் கொஞ்ச நாள் அந்த துறையை வைத்திருந்தார்’’ என்று சொன்னபோது அவையில் கலகலவென்று சிரிப்பொலி சத்தம் எழுந்தது .

ட்

அடுத்து , ’’என்னோட இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில எத்தனையோ இலாகாக்களை வைத்திருந்தேன். ஆனால் இந்த மாதிரி ஒரு இலாகாவை நான் பார்த்ததே இல்லை. மூக்கணாங்கயிறே இல்லாத இந்த இலாக்காவை எப்படித் தான் வைத்திருந்தார்களோ தெரியவில்லை. அது இலாகா மாதிரியே தெரியவில்லை அதை கட்டி காக்குறதுல எனக்கு பெரிய வேலையாக போய்விட்டது. எப்படியோ மூக்கணாங்கயிறு இல்லாத அந்த இலாக்காவுக்கு மூக்கணாங்கயிறு போட்டு இழுத்து பிடித்து விட்டேன் ’’என்று சொல்ல அவையில் கலகல சிரிப்பு சத்தம் அதிகரித்தது.

MUST READ