spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விஜய் கட்சியில் ஆதவ்! அனுப்பி வைப்பதே திருமாதான்: தி.மு.க.வுக்கு சிறுத்தைகள் கொடுக்கும் அல்வா?

விஜய் கட்சியில் ஆதவ்! அனுப்பி வைப்பதே திருமாதான்: தி.மு.க.வுக்கு சிறுத்தைகள் கொடுக்கும் அல்வா?

-

- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஆதவ் அர்ஜூனா டைரக்டராக விஜய்யின் கட்சியில் போய் இணைகிறார்! எனும் பரபரப்பு உருவாகியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. லாட்டரி அதிபர் மார்டிட்னின் மருமகன் இவர். துவக்கத்தில் வி.சி.க-வின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வந்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அடுத்த 20 நாள்களில் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றார். இது மிகப்பெரிய அதிர்ச்சி அதிர்வை அக்கட்சியினுள் உருவாக்கியது.நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அஜித் பட நடிகையின் கருத்து!

we-r-hiring

‘ஏழைகள் பலர் காலங்காலமா இந்த கட்சிக்கு உழைச்சுட்டிருக்கோம். ஆனா ஒரு பதவி இல்லை. இந்த பணக்காரர் கட்சியில் சேர்ந்து ஒரே மாசத்துக்குள்ள திருமாவுக்கு அடுத்த நிலையில் உட்கார வைக்கப்படுவதா? காரணம் பணமா?’ என்று ஓப்பனாக கொதித்தனர் நிர்வாகிகள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிரடியானக் கருத்துகளைத் தெரிவித்து வந்தார் ஆதவ். இது திமுக தலைமைக்கு கடும் கோபத்தை உருவாக்கியது.

சமீபத்தில் விஜய் வெளியிட்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு ஆதவ் அர்ஜுனா பேசியது தமிழக அரசியலிலும், ‘தி.மு.க – வி.சி.க’ கட்சியினரிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பிவிட்டது.

இந்த நடவடிக்கை சும்மா திமுகவை திருப்திப்படுத்தவே! என்று குறிப்பிடும் அரசியல் பார்வையாளர்கள் “திருமாவின் அறிவுக்கு உட்பட்டே ஆதவ் எல்லாமே பண்ணுகிறார். விஜய் மேடையில் ஆதவ் நின்றதும், பேசியதும் ஒன்றும் ஏதோ திடீரென நடந்த விஷயங்கள் கிடையாது. பல மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றுதான். அங்கே அவர் என்ன பேசப்போகிறார் என்பதும் கூட திருமாவுக்கு நன்கு தெரியும். திருமா ஏதோ ஒரு அரசியல் கணக்குக்கு வந்துவிட்டார். இளைஞர் மற்றும் நடுத்தர வயது நபர்களின் வாக்கு வங்கியின் அமோக ஆதரவு இருந்தும் கூட தனித்து நிற்க தயங்கும் விஜய்யோடு கைகோர்க்க தயாராகிவிட்டார் திருமா.ஆதவ் அர்ஜுனா - திருமாவளவன்

அதனால் ஆதவ் வை விட்டு ஆழம் பார்க்கிறார். இப்படி குடைச்சல் கொடுத்தால் திமுகவே தன்னுடன் மோதி வெளியேற்றும் அப்புறம் பாதுகாப்பாக விஜய்யோடு கூட்டு வைக்கலாம்! என்பதே திருமாவின் பிளான்களில் ஒன்று. அதனால் ஆதவ்வை இப்போது இவர் தள்ளி வைப்பது போல் வைக்க, அவர் கோபப்பட்டு விஜய்யிடம் போய் சேரும் வாய்ப்பு அதிகம். அங்கிருந்தபடியே திருமா மற்றும் விஜய்க்கு இடையில் அரசியல் பாலமாக செயல்படுவார். இதை வைத்து தேர்தல் நெருக்கத்தில் திருமா தன் வேலையை காட்டுவார்” என்கிறார்கள்.
கவனிப்போம்!

MUST READ