spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

-

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரை கருத்தில் கொண்டு பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தங்களது அணிகளின் தலைமை பயிற்சியாளர்களை நீக்கியுள்ளன. இதேபோல் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து இலங்கையின் குமார் சங்கக்கரா விலக உள்ளதாகவும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.

we-r-hiring

dravid

இந்நிலையில் ரா ஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ சமுக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. கடந்த 2012,2013ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட டிராவிட், பின்னர் 2014 மற்றும் 2015ஆம் ஐபிஎல் தொடரில் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் வருகையால் ராஜஸதான் அணி பலமடைந்துள்ள அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

MUST READ