Homeசெய்திகள்விளையாட்டு15'வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை-சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

15’வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை-சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

-

தமிழகம் வந்தடைந்த 15’வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பைக்கு – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

15’வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை போட்டி இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழகம் வந்தடைந்த 15'வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பைக்கு - சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
15’வது ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை

உலகக் கோப்பை போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக போட்டிக்கான கோப்பையை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு. இந்தியாவின் 13 முக்கிய மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் பயணத்தை தொடங்கியது. அதோடு, கோப்பை செல்லக்கூடிய ஒவ்வொரு மாநிலத்திலும் உற்சாக வரவேற்பு என்பது கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த உலகக் கோப்பை 11- வது மாநிலமாக சென்னை வந்தடைந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஹாக்கி சங்கம், அரசு அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைகளை தட்டி உற்சாக வரவேற்பினை சென்னை விமான நிலையத்தில் அளித்தனர். 

மேலும், உலக கோப்பையை திறந்தவெளி  ஜீப்பில் தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

MUST READ